by Bella Dalima 25-05-2018 | 4:07 PM
Colombo (News 1st)
தியகல பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஹற்றன் - கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தியகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழும் அபாயமுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தியகல சந்தியில் நோட்டன் பிரிட்ஜ் - லக்ஷபான ஊடாக களுகல பகுதியிலிருந்து ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியை வந்தடைய முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.