கிரிக்கெட் வீரர்கள் அப்பிள் கடிகாரம் அணியத் தடை

கிரிக்கெட் வீரர்கள் அப்பிள் கைக்கடிகாரம் அணியத் தடை

by Bella Dalima 25-05-2018 | 5:29 PM
அப்பிள் உள்ளிட்ட புதியரக கைக்கடிகாரங்களை கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் போது அணியக்கூடாது என​ ICC ஊழல் தடுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது. ICC-யின் விதிமுறைகளின் படி கிரிக்கெட் வீரர்கள் போட்டியின் போது செல்ஃபோன்கள் மற்றும் செய்தித் தொடர்பு சாதனங்களை உபயோகப்படுத்தக்கூடாது. போட்டி முடிவடைந்த பின்னரே உபயோகிக்க முடியும். போட்டியின் போது சூதாட்டம் இடம்பெறுவதைத் தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் அப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தையும் பயன்படுத்தக்கூடாது என ICC ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்பிள் கடிகாரம் மூலம் செய்திகளை பரிமாற முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன்போது கிரிக்கெட் வீரர்கள் அப்பிள் கைக்கடிகாரத்தை அணிந்திருந்தனர். இதனால் ICC ஊழல் தடுப்பு அதிகாரிகள் வீரர்களிடம் அவற்றை அணிய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.