களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு

களுகங்கையின் நீர்மட்டம் உயர்வு: மக்களை முகாம்களிலேயே தங்குமாறு அறிவுறுத்தல்

by Bella Dalima 23-05-2018 | 5:48 PM
Colombo (News 1s)  பலத்த மழை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொக்குபொத்தாகம தெரிவித்தார். இதன் காரணமாக மீண்டும் வௌ்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். மலைப்பாங்கான பகுதிகளில் கடந்த மூன்று மணித்தியாலங்களுக்குள் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்துள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார். இதனால் களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துச் செல்வதால் சிறிய அளவில் அல்லது பெருவௌ்ளம் ஏற்படும் சாத்தியம் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். இதனால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து செல்ல வேண்டாம் என இரத்தினபுரி மாவட்ட செயலாளர் அறிவுறுத்தினார்.