.webp)
கடும் மழை காரணமாக காலி பத்தேகமவின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கிங் கங்கை பெருக்கெடுத்ததால் பத்தேகம, தவலம ஆகிய பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதேவேளை, அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டம் நாகலகம் வீதியில் அமைந்துள்ள நீர்மானிக்கமைய வௌ்ளம் ஏற்படும் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் களனி ஆற்றின் இருமருங்கிலும் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் மாலா அலவத்துகொட தெரிவித்தார்.