வர்த்தகப் போரைக் கைவிட சீனா-அமெரிக்கா தீர்மானம்

வர்த்தகப் போரைக் கைவிட சீனாவும் அமெரிக்காவும் தீர்மானம்

by Bella Dalima 20-05-2018 | 6:51 PM
வர்த்தகப் போரைக் கைவிட சீனாவும் அமெரிக்காவும் தீர்மானித்துள்ளதாக சீன துணை பிரதமர் லியூ கி அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன இறக்குமதிப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்க முடிவெடுத்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, ஆப்பிள் உள்ளிட்டவைக்கு கூடுதல் வரி விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது. Make America Great Again (மீண்டும் அமெரிக்காவை பெருமைமிக்கதாக மாற்றுவோம்) என்ற வாக்குறுதியுடன் அதிபரான ட்ரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அதிகரித்தார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி அதிகரிப்பு செய்தார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப்போவதாக மிரட்டினார். ட்ரம்ப்பின் இந்த திடீர் வரி உயர்விற்கு சீனா அதிருப்தி வௌியிட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் 128 பொருட்களுக்கு சீனா 25% வரி விதித்திருந்தது. மேலும், வணிக யுத்தத்திற்கு அமெரிக்கா எங்களை தள்ளிவிடக்கூடாது என சீனா தெரிவித்திருந்தது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் ட்ரம்ப் - லியூ கி சந்திப்பு நடைபெற்றது. வர்த்தகப் பிரச்சினைகள் தொடர்பாக வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்பின் போது சுமூக முடிவு எட்டப்பட்டதாக சீன துணை பிரதமர் லியூ கி அறிவித்துள்ளார்.