வெலிகம பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

by Bella Dalima 17-05-2018 | 4:59 PM
Colombo (News 1st)  வெலிகம பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி வெலிகம பொல்அத்துமோதர பாலத்தை திறந்து வைக்கும் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். தமது சட்டத்தரணிகளுடன் நேற்றிரவு அவர்கள் பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.