விலை அதிகரிக்கப்பட்ட பால்மா சந்தைக்கு வரவில்லை

புதிய விலை அச்சிடப்பட்ட பால்மா இதுவரை சந்தைக்கு வரவில்லை

by Staff Writer 13-05-2018 | 4:35 PM
COLOMBO (News 1st) பால் மாவின் விலை அதிகரித்துள்ள போதிலும், புதிய விலை அச்சிடப்பட்ட பால்மா பக்கற்றுகள் இதுவரை சந்தைக்கு வரவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால், அதிக விலைக்கு பால்மாவை கொள்வனவு செய்ய தேவையில்லை என சபையின் தலைவர் ஹசித திலக்கரட்ண குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆம் திகதிக்கு பின்னர் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலை மாத்திரமே அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதுவரை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், சந்தைகளில் புதிய பால்மா பக்கற்றுக்கள் விநியோகிக்கபடவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. புதிய விலை அச்சிடப்பட்ட பால்மா சந்தைக்கு விநியோகிக்கப்படும் வரை, கூடிய விலைக்கு பால்மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.