by Bella Dalima 09-05-2018 | 6:53 PM
2020 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் வரை விளையாட எதிர்பார்த்துள்ளதாக 36 வயதான பாகிஸ்தான் சகலதுறை வீரரான சொஹைப் மாலிக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றிகள் பலவற்றில் பங்களிப்புச் செய்துள்ள சொஹைப் மாலிக், 35 டெஸ்ட்கள், 261 சர்வதேச ஒருநாள் மற்றும் 95 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் சார்பாக அதிகப் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரரான சஹிட் அஃப்ரிடியின் சாதனையை முறியடிக்க சொஹைப் மாலிக்கிற்கு இன்னும் 3 போட்டிகளே தேவைப்படுகின்றன.
அந்த இலக்கை 2020 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடருக்கு முன்னர் அடைய முடியும் என்ற எதிர்பார்ப்பில் சொஹைப் மாலிக் காத்திருக்கிறார்.
அடுத்த வருடம் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் 2020 வரை இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாட எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.