திடீர் அனர்த்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது: மக்களைத் தௌிவூட்டும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது
by Bella Dalima 03-05-2018 | 10:16 PM
Colombo (News 1st)
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய திடீர் அனர்த்தங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் மக்கள் சக்தி திட்டத்தின் ஊடாக மக்களைத் தௌிவூட்டும் செயற்பாடுகள் இன்னும் சில தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன.
அனர்த்தங்களினால் கடந்த காலங்களில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையை எதிர்கொள்ளும் நோக்கில், இடர் முகாமைத்துவ நிலையம், இடர் முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு இயக்கம், மக்கள் சக்தி ஆகியன இந்த திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
எதிர்வரும் சனிக்கிழமை (05) முதல் மூன்று நாட்களுக்கு மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த தௌிவூட்டல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்திற்கான தௌிவூட்டல்களை இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு இயக்கம் ஆகியன வழங்கவுள்ளன.