பிரித்தானிய உள்துறை செயலாளர் இராஜினாமா

பிரித்தானிய உள்துறை செயலாளர் இராஜினாமா

by Staff Writer 30-04-2018 | 3:44 PM
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரித்தானிய உள்துறை செயலாளர் அம்பர் ருட் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதேவேளை இவரது இராஜினாமா குறித்து பிரதமர் தெரேஸா மேவிற்கு நேற்று மாலை தொலைபேசியூடாக அறிவித்துள்ளதோடு அம்பர் ருட் அனுப்பியுள்ள இராஜினாமா கடிதத்தையும் பிரதமர் தெரேஸா மே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் தீவு மக்களுக்கு பிரித்தானியாவில் வசிப்பதற்கு குடியுரிமை வழங்கியமை தொடர்பான நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சுமத்தியிருந்தன. தம்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டுள்ள அம்பர் ருட், அழுத்தங்கள் காரணமாக இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், பிரித்தானிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அம்பர் ருட் பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.