நைஜீரிய தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு

நைஜீரிய தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 2 பாதிரியார்கள் உட்பட 19 பேர் கொலை

by Bella Dalima 25-04-2018 | 6:12 PM
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் பெனு மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றின் தேவாலயத்தில் நேற்று (24) அதிகாலை துப்பாக்கிதாரிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு பாதிரியார்கள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் கால்நடை மேய்க்கும் முஸ்லிம் சமூகத்தினர் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு முன்னதாகவே குழுவொன்று அப்பகுதியில் உள்ள 10 வீடுகளுக்கு தீ வைத்து, வன்முறையில் ஈடுபட்டதாக நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நைஜீரியாவின் தென் மத்திய பகுதியில் கிறிஸ்தவர்கள் வேளாண் தொழிலும், இஸ்லாமியர்கள் கால்நடை வளர்ப்பு தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு இடையே கடந்த சில வருடங்களாக மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட மோதலில் 70 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.