by Staff Writer 23-04-2018 | 5:12 PM
ஜி.வி.பிரகாஷ், ஜீவாவுடன் நடித்து வரும் ஷாலினி பாண்டே கிராமத்து பெண்கள் போல் பாவாடை, தாவணி அணிய விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார்.
தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படம் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் ஈர்க்கப்பட்டது.
தற்போது தமிழில், ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ‘100 சதவீதம் காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் ஜீவாவிற்கு ஜோடியாக ‘கொரில்லா’ படத்திலும் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே. இப்படம் தாய்லாந்து உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் படங்களில் நடிக்க ஷாலினி பாண்டே ஆர்வம் காண்பித்து வருகிறார்.
இது குறித்து கூறிய ஷாலினி பாண்டே, “தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டு கிராமத்து பெண்ணாக பாவாடை, தாவணி, சேலை அணிந்து நடிக்க ஆசையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.