Foxhill Supercross: அஷான், இஷான் சாம்பியன்களாயினர்

Foxhill Supercross: அஷான் சில்வா, இஷான் தசநாயக்க சாம்பியன்களாயினர்

by Bella Dalima 21-04-2018 | 9:30 PM
Colombo (News 1st) Foxhill Supercross பந்தயத்தில் அஷான் சில்வா சாம்பியனானார். இவ்வருட Foxhill Supercross பந்தயத்திற்கு MTV/MBC, நியூஸ்ஃபெஸ்ட், TV 1 உள்ளிட்ட சாம்பியன்ஸ் நெட்வர்க் ஊடக அனுசரணை வழங்கியிருந்தது. இலங்கையில் நடத்தப்படும் பிரதான பந்தயமான Foxhill Supercross தியத்தலாவை நரி மலை ஓடுபாதையில் நடைபெற்றது. இவ்வருடம் காரோட்டம் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் தலா 12 பிரிவுகள் உள்ளடக்கப்பட்டன. இலங்கை இராணுவத்தின் விஞ்ஞானப் பிரிவு, இலங்கை மோட்டார் பந்தய சங்கம் என்பன இணைந்து நடத்திய பந்தயத்தில் அஷான் சில்வா சாம்பியனானார். இதேவேளை, மோட்டார் சைக்கிள் பிரிவில் இஷான் தசநாயக்க சாம்பியனாக மகுடம் சூடினார்.