தங்கத்திற்கு 15 வீத இறக்குமதி வரி அநாவசியமானது

தங்கத்திற்கு 15 வீத இறக்குமதி வரி அநாவசியமானது: ரவி கருணாநாயக்க

by Bella Dalima 21-04-2018 | 8:19 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத இறக்குமதி வரி விதிப்பது அநாவசியமான செயல் என முன்னாள் நிதியமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். VAT வரியை தாம் குறைப்பதாக வாக்களித்திருந்ததாகவும் தற்போது 9 வீதமாக அதனைக் குறைப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார். 15 வீதமான தங்கத்திற்கான வரி தேவையற்ற வரி எனவும் எவ்வித தூரநோக்குமின்றி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.