by Bella Dalima 18-04-2018 | 9:53 PM
Colombo (News 1st)
தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை உப தலைவர் வேலணை வேணியன் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒருமித்த முற்போக்கு கூட்டணி சார்பில் பட்டியல் உறுப்பினர் பதவி வழங்குவதாகத் தெரிவித்து கட்சித் தலைமை தன்னை ஏமாற்றிவிட்டதாக வேலணை வேணியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் முதலிடத்தில் இருந்த தமக்கு ஆசனம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவராகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை உப தலைவராகவும் வேலணை வேணியன் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த பதவிகளை கைவிட்டுள்ள அவர் புதிய அரசியல் கட்சி உருவாக்கி எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.
மூன்று தடவைகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக செயற்பட்டுள்ள வேலணை வேணியன், ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராவார்.