குத்துச்சண்டை குழாம்  நாடு திரும்பியது

பொதுநலவாய விளையாட்டு: குத்துச்சண்டை குழாம் நாடு திரும்பியது

by Staff Writer 16-04-2018 | 8:39 PM
COLOMBO (News 1st) பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்ற இலங்கை குத்துச்சண்டை குழாம் நேற்று நள்ளிரவு நாடு திரும்பியது. அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஷ்டில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழா நேற்று நிறைவுக்கு வந்தது. விளையாட்டு விழாவில் 01 வெள்ளி , 05 வெண்கலப்பதக்கங்களுடன் மொத்தமாக 6 பதக்கங்களை வென்ற இலங்கை பதக்கப்பட்டியலில் 31 ஆவது இடத்தைப் பிடிதச. இது பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கை வென்றெடுத்த அதகூடிய பதக்கங்களாக பதிவானது. இலங்கை வென்றெடுத்த 6 பதக்கங்களில் 3 பதக்கங்கள் குத்துச்சண்டை கோதாக்களில் வென்றெடுக்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது. 1950 ஆம் ஆண்டுக்கு பின்னர் அனுஷா கொடித்துவக்கு பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு பதக்கமொன்றை வென்றுக் கொடுத்தார். இதன் மூலம் பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கை சார்பாக பதக்கம் வென்ற முதல் வீராங்கனையாக அனுஷா கொடித்துவக்கு வரலாற்றில் இணைந்தார். இதேவேளை பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இஷான் பண்டார மற்றும் திவங்க ரணசிங்க ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். https://www.youtube.com/watch?v=RL1CQm4x_9o