விஜய் பட ரீமேக்கில் நடிக்கும் கேத்ரின் தெரசா

விஜய் பட ரீமேக்கில் நடிக்கும் கேத்ரின் தெரசா

by Bella Dalima 10-04-2018 | 6:01 PM
விஜய் பட ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் கேத்ரின் தெரசா. விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான தெறி படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளார். எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படம் பற்றி முழு விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.