by Staff Writer 08-04-2018 | 8:12 PM
COLOMBO (News 1st) - தேசத்தின் மாபெரும் விவசாய விழாவான ''தேசிய புத்தரிசி விழா'', ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அநுராதபுரம் ஜயஶ்ரீ மகாபோதிக்கு அருகில் இன்று நடைபெற்றது.
அநுராதபுரம் ஜயஶ்ரீ மகாபோதியில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீ பெற்றுக்கொண்ட ஜனாதிபதி புத்தரிசி
விழாவில் இணைந்துகொண்டார்.
சிறுபோகத்தின்போது அறுவடை செய்யப்பட்ட அரிசி, ஜய ஶ்ரீ மகாபோதிக்கு தானம் செய்வதற்காக ஜனாதிபதியின் கரங்களினால் பாத்திரத்தில் இடப்பட்டது.
வேடுவத் தலைவர் ஊறுவரிகே வன்னில அத்தோவினால், சம்பிரதாயபூர்வமாக ஜயஶ்ரீ மகாபோதிக்கு தேன் பூஜை செய்வதற்கான தேன் பாத்திரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
பின்னர், வரலாற்று சிறப்புமிக்க சப்ரகமுவ மகா விகாரையிலிருந்து கொண்டுவரப்பட்ட நச்சுத்தன்மையற்ற உள்நாட்டு அரிசிப்பாத்திரம் ஜனாதிபதியினால், பாரம்பரிய முறைப்படி சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கு பூஜை செய்யப்பட்டது.
இதனையடுத்து, புத்தரிசி விழாவிற்கான நினைவுச் சின்னம் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை தேசிய விவசாய சங்கத்தின் உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதுடன், அனைத்து மாகாணங்களுக்குமான விதை நெல் இதன்போது ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டது.
https://www.youtube.com/watch?v=C1hjJ1GyfJ8