by Staff Writer 08-04-2018 | 10:09 PM
COLOMBO (News 1st) - சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சக்தி எப்.எம் நடத்திய, கிழக்கில் சக்தி கிரிக்கெட் கொண்டாட்டத்தில் அட்டாளைச்சேனை சோபர்ஸ் அணி சம்பியனானது.
இறுதிப்போட்டியில் புத்தூர் தமிழ் பசங்க அணி 32 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச சபை மைதானத்தில் நடத்தப்பட்ட போட்டி தொடரில் நூறுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
அணிக்கு அறுவர் கொண்ட நொக் அவுட் முறையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு புத்தூர் தமிழ் பசங்க மற்றும் அட்டாளைச்சேனை சோபர்ஸ் ஆகிய அணிகள் தகுதிபெற்றன.
முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை சோபர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களை பெற்றது.
59 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய தமிழ் பசங்க அணி 16 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
போட்டியில் 32 ஓட்டங்களால் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை சோபர்ஸ் அணி சக்தி எப்.எம்மின் கிழக்கில் சக்தி கிரிக்கெட் கொண்டாட்டத்தில் சம்பியனாக மகுடம் சூடியது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக சோபர்ஸ் அணியின் ரம்ஷான் தெரிவானதோடு தொடரின் சிறந்த வீரராக தமிழ் பசங்க அணியின் விதுஷன் தெரிவு செய்யப்பட்டார்.
இன்று இரவு நடைபெறும் இசை நிகழ்ச்சியில் சம்பியனான அணிக்கு 1 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.
அத்துடன், இறுதிப் போட்டி வரை முன்னேறிய தமிழ் பசங்க அணிக்கு 50,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=0v3sdvnOO1k