ரஷ்ய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் 7 தொழிலதிபர்கள் மற்றும் 17 சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
குறித்த அனைவரும் உலகம் முழுவதும் தீய செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த தொழிலதிபர்களால் நிர்வகிக்கப்படும் 12 நிறுவனங்களின் வங்கிக்கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
