Colombo (News 1st)
சந்தேகத்தின் பேரில் கடுகன்னாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர், சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மைத்திரி குணரத்னவின் ஜீப் வண்டிக்குள் இருந்து இரண்டு துப்பாக்கிகளும் 10 ரவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த ஜூப் வண்டியின் சாரதியான மைத்திரி குணரத்னவிடம் பொலிஸார் சோதனை நடத்திய போது, துப்பாக்கிகளுக்கான அனுமதிப்பத்திரம் காணப்படாமையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பித்ததை அடுத்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மைத்திரி குணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.