பிரதமருக்கு எதிரான பேரணி மாவனெல்லயை சென்றடைந்தது

பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவு: பேரணி மாவனெல்லயை சென்றடைந்தது

by Bella Dalima 31-03-2018 | 9:34 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி ஆரம்பிக்கப்பட்ட பேரணி இன்று மாலை மாவனெல்லயை சென்றடைந்தது. ''சர்வாதிகார நண்பர்களைத் தோற்கடிப்போம்'' என்ற தொனிப்பொருளில், ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்துள்ளன. கண்டி கெடம்பே விஹாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளின் பின்னர், இன்று காலை இந்தப் பேரணி கெடம்பே மைதானத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமானது. பேரணி பேராதனை, கிரிபத்கும்புர, பிலிமதலாவை, கடுகன்னாவ நகர்களைக் கடந்து இன்று மாலை மாவனெல்லயை அடைந்தது. மாவனெல்ல நகரில் இருந்து நெலும்தெனிய வரை பேரணி நாளை பயணிக்கவுள்ளது.