தாய்லாந்தில் பஸ்ஸில் தீ விபத்து: 20 பேர் பலி

தாய்லாந்தில் பஸ்ஸில் தீ விபத்து: 20 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி

by Bella Dalima 30-03-2018 | 5:50 PM
தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள மியன்மார் எல்லையில் பஸ்ஸொன்றில் தீ பரவியதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலை 1.30 மணியளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. தீ வேகமாகப் பரவியதால், பஸ்ஸில் இருந்து 20 புலம்பெயர் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்து குறித்து தாய்லாந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.