புதுக்குடிருயிப்பு பிரதேசசபைத் தலைவராக பிரேமகாந்த

40 வருடங்களின் பின்னர் கூடிய புதுக்குடியிருப்பு பிரதேச சபை: தலைவராக எஸ்.பிரேமகாந்த் தெரிவு

by Staff Writer 28-03-2018 | 9:28 PM
COLOMBO (News 1st) - 40 வருடங்களின் பின்னர் புதுக்குடிருயிப்பு பிரதேச சபை இன்று கூடியது. இன்றைய அமர்வின்போது பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எஸ்.பிரேமகாந்த் தெரிவு செய்யப்பட்டதுடன் உப தலைவராக க.ஜனமேயந்த்தும் தெரிவு செய்யப்பட்டனர். 21 ஆசனங்கள் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெற்றதுடன் சுயேட்சை குழு 4 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன தலா இரண்டு ஆசனங்களையும்,ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ,தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு ஆசனத்தை கைப்பாற்றியமை குறிப்பிடத்தக்கது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் காரைநகர் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. காரைநகர் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோரை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பட்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது. யாழ். காரைநகர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி 2 ஆசனங்களையும் சுயேட்சைக் குழு 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 2 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் கொண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும் சுயேட்சைக்குழு சார்பிலும் பிரேரிக்கப்பட்ட இருவருக்கிடையில் தலைவருக்கான போட்டி இடம்பெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்கப்பட்ட விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் 7 வாக்குகளை பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுயேட்சைக்குழு சார்பில் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர் 3 வாக்குகளையும் பெற்றார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனை தொடர்ந்து உப தவிசாளருக்கான வாக்கெடுப்பும் இடம்பெற்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் பாலச்சந்திரன் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேவேளை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் அதிகாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமாகியுள்ளது. பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் பிரதேச சபையின் தலைவர் தெரிவு செய்யப்பட்டார். இதன் ​போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் த.நடநேன்திரனும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தே.ரஜீவன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இந் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு ஆதரவாக 19 பேர் வாக்களிக்க தே.ரஜீவனுக்கு 6 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. இதே வேளை வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் பிரதித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தே.சச்சிதானந்தம் தெரிவானார். 25 ஆசனங்கள் கொண்ட வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 4 ஆனசங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மூன்று ஆசனங்களையும்,சுயேட்சை குழு இரண்டு ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தை பெற்றுக் கொண்டது. மேலும் இறக்காமம் பிரதேச சபையின் ஆட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வசமானது பிரதேச சபையின் தலைவர் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் ஜ.கலிலூர் ரஹ்மானும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ச.ஜெமில் காரியப்பரும் போட்டியிட்டனர். இதன் போது 8 வாக்குகளை பெற்ற ஜ.கலிலூர் ரஹ்மான் பிரதேச சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். பிரதி தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அ.லெ.நௌபர் தெரிவு செய்யப்பட்டார். 13 ஆசனங்கள் கொண்ட இறக்காமம் பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சி 5 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 ஆசனகங்களையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுண ஒரு ஆசனத்யைும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சி வசமானது. பிரதேச சபை தவிசாளரை பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் ​போது ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஆ.லெ.அமானுல்லாவும் தேசிய காங்கிரஸ் சார்பில் எம்.எஸ்.ஜௌபரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இதன் ​போது இருவரும் தலா 9 வாக்குளைப் பெற்றனர். இதனையடுத்து குழுக்கள் முறை மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆ.லெ.அமானுல்லா தலைவராக தெரிவு செய்யபட்டார். இதன் பின்னர் பிரதித் தலைவர் பதவிக்கும் இடம்பெற்ற வாக்கெப்பில் இரண்டு தரப்பினரும் தலா 9 வாக்குகளை பெற்றனர். இதனையடுத்து இடம்பெற்ற குழுக்கள் முறை மூலம், தேசிய காங்கிரஸின் எம்.எஸ்.ஜௌபர்பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார் ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களையும் , தேசிய காங்கிரஸ் 6 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 ஆசனங்களையும், ஶ்ரீலங்கா பொதுஜ பெரமுண பெற்றுக் கொண்ட ஒரு ஆசனம் உள்ளடங்களாக 18 ஆசனங்கள் கொண்ட பிரதேச சபையாக அட்டாளைச்செனை பிரதேச சபை காணப்படுகின்றது மேலும் ஆலையடி வேம்பு பிரதேச சபையின் அதிகாரம் தமிழர் விடுதலை கூட்டணி வசமானது. பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தலைவரை தெரிவு செய்வதற்கு முடிவு எட்டப்படடது. இதன் அடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் க.பேரின்பராசாவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் நா.ராசதுரை ஆகியோர் போட்டியிட்டனர். 12 வாக்குகளைப் பெற்ற க.பேரின்பராசா தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட நா.ராசதுரைக்கு 2 வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாத நிலையில் ஒருவர் தமிழர் விடுதலை கூட்டமைப்பின் உறுப்பினருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் வி.ஜெகன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். 16 கொண்ட ஆலையடி வேம்பு பிரதேச சபையில் தமிழர் விடுதலைக் கூட்டணி 6 ஆசனங்களயைும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=7KCpvinLeMQ