மஸ்கெலிய பிரதேச சபை தலைவர் தெரிவில் கைகலப்பு

மஸ்கெலிய பிரதேச சபை தலைவர் தெரிவில் கைகலப்பு

by Staff Writer 28-03-2018 | 11:49 AM
மஸ்கெலியா பிரதேச சபையின் புதிய தலைவரை தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. பிரதேச சபையின் கன்னி அமர்வு இன்று கூடியபோது புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. எனினும் இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் அமைதியற்ற முறையில் செயற்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார். பின்னர் பொலிஸாரின் தலையீட்டுடன் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மஸ்கெலியா நகரில் இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார். https://www.youtube.com/watch?v=7MrhF402yNA