by Bella Dalima 20-03-2018 | 4:32 PM
பெண்களைப் போன்று ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு Dimethandrolone Undecanoate (DMAU) என பெயரிடப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பை தடுக்க பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆண்களுக்கு அதுபோன்ற மாத்திரைகள் எதுவும் இல்லை. கருத்தடை அறுவைசிகிச்சை மூலமே குழந்தை பிறப்பு தடுக்கப்படுகிறது.
தற்போது, பெண்களைப் போன்று ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Dimethandrolone Undecanoate எனப்படும் இந்த மாத்திரையை ஆண்கள் தினமும் ஒன்று வீதம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இது பாதுகாப்பானது எனவும் குழந்தை பிறப்பைத் தடுக்கக்கூடியது எனவும் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டெபானி பேஜ் உள்ளிட்ட பேராசிரியர்களால் இந்த மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
18 முதல் 50 வயது வரையிலான நல்ல உடல் நலத்துடன் கூடிய 100 பேரிடம் இந்த மாத்திரை பரிசோதிக்கப்பட்டது.
தினமும் உட்கொள்ளும் வகையான இந்த மாத்திரைக்கு பதிலாக ஊசி மருந்து அல்லது ஜெல் போன்றவைகளை உருவாக்கலாம் என பெரும்பாலான ஆண்கள் சிபாரிசு செய்துள்ளனர்.