ஹிரோஷிமா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உற்சாக வரவேற்பு
by Bella Dalima 15-03-2018 | 8:30 PM
Colombo (News 1st)
ஜப்பானுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஹிரோஷிமா நகருக்கு சென்றிருந்தார்.
இதன்போது ஹிரோஷிமா நகர மேயர் ஜனாதிபதிக்கு உற்சாக வரவேற்பளித்திருந்தார்.
ஹிரோஷிமாவில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அங்குலுள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளார்.