ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜப்பான் பிரதமருக்கு இடையே சந்திப்பு
by Bella Dalima 14-03-2018 | 9:05 PM
ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேயை இன்று சந்தித்தார்.
டோக்கியோ நகரிலுள்ள அந்நாட்டுப் பிரதமர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
பொருளாதாரம், முதலீட்டு வாய்ப்புகள், அரசியல் மற்றும் கலாசார விடயங்கள் போன்றவை கலந்துரையாடலில் இடம்பெற்றதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் அரச தலைவர்களுக்கு இடையில் உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.