கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய 161 பேர் கைது

கண்டி சம்பவத்துடன் தொடர்புடைய 161 பேர் கைது

by Staff Writer 11-03-2018 | 8:58 PM
COLOMBO (News 1st) - கண்டி உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 230 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 161 சந்தேகநபர்கள் கண்டி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் 69 சந்தேகநபர்கள் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை கண்டி மாவட்டத்தில் தற்போது சுமூகமான சூழல் நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். அத்துடன் இந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.