3 கோடி பெறுமதியுடைய ஹெரோயினுடன் இருவர் கைது

3 கோடி ரூபா பெறுமதியுடைய ஹெரோயினுடன் கடுவளையில் இருவர் கைது

by Bella Dalima 08-03-2018 | 6:34 PM
Colombo (News 1st)  மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகப் பெறுமதியான ஹெரோயினுடன் கடுவளையில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடுவளை பஸ் தரிப்பிடத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோ 600 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர். கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நேற்றிரவு (07) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பஸ் தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேகநபர் வீடொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்களை கடுவளை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தி, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.