புதுக்கடை சிறைச்சாலை வீதியில் மனிதத் தலை

புதுக்கடை சிறைச்சாலை வீதியில் மனிதத் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

by Bella Dalima 07-03-2018 | 8:46 PM
Colombo (News 1st) கொழும்பு - புதுக்கடை சிறைச்சாலை வீதியிலுள்ள பொலிஸ் காவலரணுக்கு அருகில் மனிதத் தலையொன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மனிதத் தலை மீட்கப்பட்டுள்ளது. பை ஒன்றினால் மூடப்பட்டிருந்த நிலையில் தலை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.