by Bella Dalima 06-03-2018 | 6:55 PM
Colombo (News 1st)
மாத்தளை மாவட்டத்தில் இவ்வாண்டிற்கான சிறுபோகத்தில் 100 ஏக்கர் காணியில் சின்ன வெங்காய செய்கை மேற்கொள்ள மத்திய மாகாண விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இயற்கைப் பசளை பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக 40 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம், தம்புள்ளை, சீகிரியா, கலேவெல பகுதிகளில் சின்ன வெங்காயச் செய்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.