வலிமையான இராணுவம்: பட்டியலில் இந்தியா 4 ஆம் இடம்

உலகின் மிக வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆம் இடம்

by Bella Dalima 06-03-2018 | 5:23 PM
உலகின் மிக வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கான உலகின் வலிமையான இராணுவத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலை குளோபல் ஃபயர் பவர் அமைப்பு வௌியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 133 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் அமெரிக்கா முதலாமிடத்தையும் ரஷ்யா இரண்டாமிடத்தையும் சீனா மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன. இராணுவ பலம், படை வீரர்களின் எண்ணிக்கை, வரவு செலவுத் திட்டத்தில் இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு, இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவியியல் அம்சங்கள் உள்ளிட்ட 50 அலகுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதனடிப்படையில், ஆய்வின் முடிவு வௌியிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவும் இந்தியாவும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடிக்க படை வீரர்களின் எண்ணிக்கையே பிரதான தாக்கம் செலுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்