இறக்குமதியாகும் உருளைக்கிழங்கின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலை அதிகரிப்பு

by Bella Dalima 24-02-2018 | 3:42 PM
Colombo (Newsfirst) வரி அதிகரிப்பிற்கமைய, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 70 ரூபா வரை அதிகரிக்கும் என அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான விசேட வர்த்தக வரி நேற்று (23) நள்ளிரவு முதல் 30 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்தது. இதுவரையில் ஒரு ரூபாவாகக் காணப்பட்ட விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு முதல் 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உருளைக்கிழங்கு அறுவடை நிறைவடைந்துள்ளதால் , உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது. புதிய வரித்திருத்தம் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.