by Bella Dalima 22-02-2018 | 5:07 PM
பெருவில் இரண்டு அடுக்கு பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெருவின் Ocona எனும் பகுதியில் அமைந்துள்ள Panamericana Sur நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாலையின் மலைப்பாங்கான பகுதியில் ஆபத்தான வளைவொன்றில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
அந்தப் பகுதியில் ஆறு ஒன்று ஓடுவதால், உயிரிழந்தவர்களின் உடல்கள் பல ஆற்று நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஜனவரி மாத்தின் முதல் பகுதியில் அங்கு இடம்பெற்ற இதேபோன்றதொரு விபத்தில் 48 பேர் உயிரிழந்திருந்தமை நினைவுகூரத்தக்கது.