உயிரிழந்தோரின் குடும்பங்கள் சொல்லொண்ணாத் துயரில்..

கிராண்ட்பாஸ் கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் சொல்லொண்ணாத் துயரில்...

by Bella Dalima 15-02-2018 | 8:07 PM
Colombo (Newsfirst)  கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (14) கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பழமையான கட்டிடத் தொகுதியே இடிந்து வீழ்ந்தது. இதன்போது உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு இன்று நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் சென்றிருந்தனர். உயிரிழந்தவர்களில் 54 வயதான செல்லையா வௌ்ளையம்மாவும் ஒருவர். இவர் குறித்த தனியார் நிறுவனத்தில் கடந்த 15 வருடங்களாகக் கடமையாற்றி வந்துள்ளார். செல்லையா வெள்ளையம்மாவின் பிரிவு அவரின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 41 வயதான லலிதாவும் இன்று உயிருடன் இல்லை. இரண்டு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தொழிலுக்குச் சென்ற லலிதாவின் வாழ்வு பரிதாபகரமாக முடிந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நூர் நசீமா வாழ்ந்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்களையும் அவரின் இழப்பு துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏனைய செய்திகள்