லசந்த விக்ரமதுங்க கொலை: பிரசன்ன நாணயக்கார கைது

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ​கைது

by Staff Writer 14-02-2018 | 1:50 PM
COLOMBO (Newsfirst) - ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொலை சம்பவம் தொடர்பான தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் முனன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸட மாஅதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=SCxbnvYd-qE