இறக்குமதியாகும் உருளைக்கிழங்கிற்கு வரி?

இறக்குமதியாகும் உருளைக்கிழங்கிற்கு வரி விதிப்பு: அரசு கவனம் செலுத்தவுள்ளது

by Bella Dalima 13-02-2018 | 5:48 PM
Colombo (Newsfirst) இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு வரி விதிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலை, சந்தையில் மிகக்குறைவாகக் காணப்படுவதால் உள்நாட்டு உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை காணப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் உருளைக்கிழங்கின் விலை 30 முதல் 60 ரூபா அளவில் காணப்படும் அதேவேளை, உள்நாட்டு உருளைக்கிழங்கு 1 கிலோகிராம் 90 முதல் 100 ரூபா அளவில் காணப்படுகிறது. இவற்றைக் கருத்திற்கொண்டு இறக்குமதி செய்யபடும் உருளைக்கிழங்கிற்கான வரியை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.