by Staff Writer 06-02-2018 | 11:51 AM
COLOMBO (Newsfirst) - கம்பஹா கெஹெல்பத்தர பகுதியில் இன்று காலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.30 அளவில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிப் பிரயோகத்தில் 65 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.